Have any questions?
+44 1234 567 890
நல்வரவு
ஆலோசனை
- 14 மொழிகளில் வேலை, வதிவிட அனுமதிப்பத்திரம், குடியியலுரிமை, டொச்மொழி வகுப்புகள், நிதிநிர்வாகம், வருமானவரி, காப்புறுதி, வீடு, வாடகை, குடும்பம், கல்வி மற்றும் உடல்நலம் தொடர்பான வினாக்களுக்கு விடையும் விளக்கமும் அளிக்கப்படும்.
- வருமானவரி மற்றும் படிவங்கள் நிரப்புதல், கடிதங்கள், விண்ணப்பங்கள், ஆட்சேபனைக் கடிதங்கள் போன்றன எழுதித்தரப்படும்.
- தொடர்புகளை அமைத்துக் கொடுத்தல் மற்றும் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் சந்தர்ப்பங்களில் மத்தியஸ்தம் வகிப்பது.
அறியத்தருதல்
- குடிபெயர்வும் ஒருங்கிணைவும் பற்றிய விடயங்களை குடிபெயர்ந்தோருக்கான அமைப்புக்கள், மதநிலையங்கள், இந்நாட்டவர்கள், அரசஅலுவலகங்கள், இலாபநோக்கமற்ற நிறுவனங்கள், அறிஞர்கள், ஊடகங்கள் மற்றும் தொழில்வழங்குவோர் போன்றவர்களுக்கு வழங்குதல்.
- தகவல்நிகழ்வுகள் மற்றும் தொழிற்கல்விகளை நெறிப்படுத்துவது
- ஒருங்கிணைவு சம்பந்தமான செயற்திட்டங்களுக்கு
ஆலோசனை வழங்கல்.
மொழிபெயர்ப்பு
அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்படும் வகையில் பத்திரங்கள், கடிதங்கள், சான்றிதழ்கள், பிரசுரங்கள் போன்றவை தனியார், தொழிற்சாலைகள், அரச மற்றும் நிறுவனங்களுக்காக மொழிபெயர்ப்பு செய்து தரப்படும்.
ஆலோசனைகளுக்காக நேரத்தைக் கேட்டுப் பெற்றுக் கொள்ளவும். வாய்மொழிமூல ஆலோசனைகள் இலவசமானது. மேலதிகசேவைகளுக்கான கட்டணங்களை www.ggg-migration.ch/tarife.html. இற் பார்க்கவும்.